மாணவர்களுக்கு விழிப்புணர்வு
விருத்தாசலம்: அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விருத்தாசலம் ரயில்வே இருப்புபாதை போலீசார் சார்பில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். இதில், ரயில்வே காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி கலந்து கொண்டு, ரயில் வரும்போது தண்டவாளங்களை கடந்து செல்லக்கூடாது. மொபைல் போன் பேசிக்கொண்டு ரயில்பாதையை கடக்ககூடாது. ரயில் தண்டவாளம் அருகே குழந்தைகளை விளையாட அனுமதிக்க கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள், ரயில்வே போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.