உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: டி.எஸ்.பி.,துவக்கி வைப்பு

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: டி.எஸ்.பி.,துவக்கி வைப்பு

கடலுார்: கடலுார் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்ட எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் விழிப்புணர்வு மாரத்தான் கடலுாரில் நடந்தது. மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், திட்ட நோக்க உரையாற்றினார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பரிமேலழகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மேற்பார்வையாளர் கதிரவன் வரவேற்றார். கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார், கொடியசைத்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தார். கடலுார் அரசு தலைமை மருத்துவமனை துணை இயக்குனர் (காசநோய்) கருணாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட எச்.ஐ.வி.,உள்ளோர் சங்கத்தலைவர் ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். போட்டியில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் ஐநுாறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ