உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

வேப்பூர்: வேப்பூர் அடுத்த நல்லுார் அரசு நடுநிலைப்பள்ளி சார்பில், மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர் வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு, பள்ளி ஆசிரியர் கற்பகம் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் வசந்தி, முருகன், திவ்யலட்சுமி, சுகன்யா, சித்ரா, மகாலட்சுமி, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், அரசு பள்ளி முன் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, கல்வியின் முக்கியத்துவம், அரசு பள்ளியின் சிறப்பம்சங்கள், அரசின் கல்வித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை