உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்

அரசு பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மாலா தலைமை தாங்கினார். மங்கலம்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் காளமேகம் முன்னிலை வகித்தார். சென்னையில் இருந்து வந்திருந்த எஸ்.பி., முருகேசன், இன்ஸ்பெக்டர் சிவராஜன் சப் இன்ஸ்பெக்டர்கள் எழிலரசன், சசிபிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, காவலன் செயலியை பயன்படுத்தும் விதம், மாணவிகள் தங்களை எவ்வாறு பாதுகாத்துகொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.இதில், ஆசிரியர்கள், மாணவிகள், தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் திலகவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை