மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
23-Mar-2025
கிள்ளை; சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில், கடலூர் மாவட்ட போலீஸ் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், ஒன்றிணைவோம் என்ற பெயரில் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் (பொறுப்பு) முன்னிலை வகித்தார். பொருளியல் துறைத் தலைவர் அறிவழகன் வரவேற்றார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., நல்லதுரை, டி.எஸ்.பி.,க்கள் லாமேக், ராமதாஸ், இன்ஸ்பெக்டர்கள் அம்பேத்கார், கவிதா, சப் இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், ஆறுமுகம் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
23-Mar-2025