விழிப்புணர்வு நாடகம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் புகையில்லா போகி விழிப்புணர்வு நாடகம் நடந்தது. நகராட்சி நிர்வாகமும், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில், 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளியில் இருந்து பஸ் நிலையம் வரை பேரணி சென்றனர். பழைய பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பதாக கூறி, மாணவிகள் நாடகத்தை அரங்கேற்றினர். தலைமையாசிரியர் பூங்கொடி, பரப்புரையாளர்கள் கவிதா, சுதா, வினோ, ஜெயந்தி, ஜெயஸ்ரீ கலந்து கொண்டனர்.