மேலும் செய்திகள்
விழிப்புணர்வு பிரசாரம்
03-Oct-2025
சிதம்பரம்: சிதம்பரத்தில் போக்குவரத்து காவல் துறை சார்பில், சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தில்லைகோவிந்தராஜ பெருமாள் முன்னிலை வகித்தார். பாதுகாப்பான முறையில் வாகனங்களை ஓட்ட வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி ஆட்டோக்களை இயக்க வேண்டும் என, ஓட்டுனர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினார். தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
03-Oct-2025