உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விழிப்புணர்வு நிகழ்ச்சி

 விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருத்தாசலம்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அனைத்து மகளிர் சப் இன்ஸ்பெக்டர் லதா முன்னிலை வகித்தார். சேவை மைய நிர்வாகி சுகன்யா வரவேற்றார். அதில் சட்ட அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு உதவி எண் 1098, இணையவழி குற்றங்களுக்கான பாதுகாப்பு உதவி எண் 1930, உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக எண் 04142 -221080 மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலக எண் 04142 -294444 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்புகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. ஏட்டுகள் சுந்தரி, அமுதா உள்ளிட்டோர், பங்கேற்றனர். ஊர் நல அலுவலர் புவனேஸ்வரி நன்றி கூறினார். முன்னதாக, சமூக நலத்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ