மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
30-Dec-2024
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. எம்.ஆர்.கே., கல்லுாரி நாட்டுநலப்பணி திட்டம் மற்றம் ஆண்ட்டி ட்ரக் கிளப் சார்பில் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணிக்கு கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப்பணி திட்ட சித்தி விநாயகம் வரவேற்றார்.சைக்கிள் பேரணியை, காட்டுமன்னார்கோவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரகுராமன் துவக்கி வைத்தார். விளையாட்டு துறை பேராசிரியர்கள, கொளஞ்சி, ராஜ்குமார் பேரணியை ஒருங்கிணைத்தினர். பிரபு நன்றி கூறினார். மாணவர்கள் பங்கேற்ற, விழிப்புணர்வு பேரணி பதாகைகள் ஏந்தி, காட்டுமன்னார்கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
30-Dec-2024