உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விநாயகர் கோவிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி

விநாயகர் கோவிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி

நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் நவராத்திரி முன்னிட்டு பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் நவராத்திரி முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவாமி பொம்மைகளால் கொலு வைத்து தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது வருகிறது. நேற்று முன்தினம் சாய் நடன வித்யாலயா நாட்டிய குழுவை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலையில் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடத்தினர். மாணவிகளுக்கு அரிமா வட்டார தலைவர்கள் ரவிசங்கர், ராமலிங்கம், கோவில் தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி பரிசு வழங்கினர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !