உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாரதி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

பாரதி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

புவனகிரி: புவனகிரி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.புவனகிரி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வை எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சியை இந்தாண்டும் தக்க வைத்துள்ளனர். மாணவி ஷண்முகப்பிரியா 600க்கு 594 மதிப்பெண், மாணவி யுவராணி 591 மதிப்பெண், ஹரிணி, அறிவுக்கரசன், கிருஷ்ணராஜ், நித்திஷ், சிவராம் ஆகியோர் 590 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.உயிரியல் பாடத்தில் 36 மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 22 பேர், கணினி அறிவியலில் 10 பேர், கணித பாடத்தில் 5 பேர், இயற்பியல் பாடத்தில் 2 பேர், வணிக கணிதம் பாடத்தில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியை பழனியம்மாள், உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி ஆகியோர் பாராட்டினர். பள்ளியின் ஆலோசனைக் குழுத் தலைவர் வழக்கறிஞர் பாஸ்கரன், செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் பாலச்சந்தர், டாக்டர் சந்திரசேகரன், ஜெகன் உட்பட பலர்உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை