மேலும் செய்திகள்
மழையால் பசு இறப்பு
20-Oct-2024
புதுச்சத்திரம்: பைக்கில் சென்றவர் சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் மகன் நெடுமாறன்,45. இவர் தனது பைக்கில் (டி.என்.51.ஜே. 9481) கடலுாரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்றார்.புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் வளைவு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த நெடுமாறன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுஷகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Oct-2024