உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

திட்டக்குடி: வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திட்டக்குடி அடுத்த சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வம், 45. இவர் நேற்று முன்தினம் பகல் தனது டின். 91 - எக்ஸ். 5902 பதிவெண் கொண்ட பைக்கை வாசலில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். மாலை 4:00 மணிக்கு வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி