காட்டுமன்னார்கோவிலில் பலே பைக் திருடன் கைது ; தப்பி சென்றபோது கால் முறிந்தது; 3 பைக் பறிமுதல்
காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவிலில், தொடர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடனை போலீசார் கைது செய்து, 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவர் தப்பி ஓட முயன்றபோது, கால் முறிவு ஏற்பட்டதுகடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வடவாறு பாலம் அருகில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். ஆனால் அவர், போலீசார் அருகில் வந்தவுடன், வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றார். அப்போது வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. போலீசார், அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, விசாரணை மேற்கொண்டனர்.அவர், காட்டுமன்னார்கோவில் அடுத்த வ.கொளக்குடியை சேர்ந்த முகம்மது அன்சாரி மகன் தாஜுதீன், 32; காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் பல இடங்களில் மொபைல் போன்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து, தாஜுதீன் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர். அவரிடம் 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.