உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருதரப்பு மோதல் :11 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் :11 பேர் மீது வழக்கு

கடலுார்: இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கடலுார், வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் அபிஷேக்,22; இவரது சித்தப்பா இளையமணிக்கும், அதே பகுதியை சேர்ந்த மலையப்பன்,24; என்பவருக்கும், முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் இருதரப்புக்கும் அதே பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகில் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதில், காயமடைந்த அபிஷேக் உட்பட 3 பேர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார், இருதரப்பை சேர்ந்த மலையப்பன், தினேஷ், மணிபாலன், முகிலன், இளையராஜா, இளவரசன் உட்பட 11 பேர் மீது, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை