மேலும் செய்திகள்
வீட்டுக்கு தீ வைப்பு 6 பேர் மீது வழக்கு
22-Oct-2026
குள்ளஞ்சாவடி: இருதரப்பு மோதல் தொடர்பாக, 27 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். குள்ளஞ்சாவடி அடுத்த கிழக்கு வசனாங்குப்பத்தை சேர்ந்தவர் தணிகாச்சலம் மகள் தமிழரசி,20; அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கலையழகன்,33; உறவினர்களான அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று (நவ.,18) நடந்த தகராறில் தமிழரசியை, கலையழகன் வயிற்றில் உதைத்துள்ளார். இதையடுத்து தமிழரசியின் ஆதரவாளர்கள் கலையழகனை கத்தியால் வெட்டினர். இதில் காயமடைந்த தமிழரசி, கலையழகன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து இருதரப்பு புகார்களின் பேரில் இருதரப்பை சேர்ந்த 27 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Oct-2026