மேலும் செய்திகள்
முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு
27-Oct-2024
கடலுார் : முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கடலுார், முதுநகர் தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தன்.53; உதயன். இருவருக்கும் மீன்பிடிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், இருவருக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினராக தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து விவேகானந்தன் மற்றும் உதயன் ஆகிய இருவரும் கடலுார் துறைமுகம் போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து இருதரப்பிலும் சேர்ந்த உதயன், விவேகானந்தன் உட்பட 8 பேரை தேடி வருகின்றனர்.
27-Oct-2024