உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேரணி செல்ல அனுமதி மறுப்பு போலீசாரிடம் பா.ஜ., வாக்குவாதம்

பேரணி செல்ல அனுமதி மறுப்பு போலீசாரிடம் பா.ஜ., வாக்குவாதம்

பெண்ணாடம்: கடலுார் மாவட்டம், பெண்ணாடம், தொளார் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து நந்தப்பாடி பஸ் நிறுத்தம் வரை சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியேந்தி, பைக்கில் பேரணி செல்ல பா.ஜ., வினர் பெண்ணாடம் போலீசில் கடந்த 2 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும், நேற்று காலை 9:50 மணிக்கு தடையை மீறி பா.ஜ., நல்லுார் ஒன்றிய தலைவர் மணிமேகலை தலைமையில், முன்னாள் மண்டல தலைவர் காமராஜ் உட்பட 30க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் தொளார் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே ஒன்று கூடினர். தகவலறிந்து வந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார், தேசிய கொடியேந்தி நடந்து செல்வது என்றால் செல்லுங்கள், பைக்கில் செல்லக்கூடாது எனவும், மீறினால் கைது செய்வோம் என எச்சரித்தனர். இதனால், போலீசாருக்கும், பா.ஜ., வினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து, பேரணி செல்லாமல் பா.ஜ.,வினர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை