பா.ஜ., மாவட்ட பயிலரங்கம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் பா.ஜ., சார்பில், 125 நாள் வேலை திட்டம் குறித்த மாவட்ட பயிலரங்கம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ராகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அகத்தியர், மாவட்ட பொருளாளர் சீனு சங்கர், மகளிரணி மாநில துணை தலைவர் சரண்யா முன்னிலை வகித்தனர். விபிஜி ராம்ஜி 125 நாள் திட்டம் குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் விளக்கி பேசினார். நிகழ்ச்சியில், விவசாய அணி மாவட்ட தலைவர் குமரேசன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் பரத், மாவட்ட துணை தலைவர்கள் மாளா, முருகன், மாவட்ட செயலாளர் வேல்விழி, மண்டல தலைவர்கள் லட்சுமி, நரசிம்மன், வினோத், முருகன், பிரபாகரன், சக்திவேல், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.