உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., ஆன்மிக பிரிவு நிவாரணம் வழங்கல்

பா.ஜ., ஆன்மிக பிரிவு நிவாரணம் வழங்கல்

கடலுார்; கடலுாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. கடலுார் குண்டுசாலை எம்.ஜி.ஆர்., நகர், திடீர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் நிவாரண பொருட்கள் வழங்கினார். மாநகரத் தலைவர் வெங்கடேசன், முன்னாள் மாநகரத் தலைவர் தேவநாதன், ஆன்மிக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன், முத்துக்குமாரசாமி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பாஸ்கர், ஓ.பி.சி., பிரிவு வைத்தியநாதன், விஜய், முத்துக்குமரன், மாநகர பொதுச் செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி