உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., தொண்டர்கள் அதிருப்தி

பா.ஜ., தொண்டர்கள் அதிருப்தி

பி ரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருந்தார். அதில், அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆகியோருக்கு பிரமாண்ட மணிமண்டபம் அமைக்கப்படும் என உறுதியளித்துச் சென்றார். இந்நிகழ்வில், பிரதமரை வரவேற்கும் வகையில் திருச்சி, தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் வருகை புரிந்தனர். இதற்கிடையே, பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில், கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் நிர்வாகிகள் கூறுகையில், 'கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியை வரவேற்க செல்வதில் நிர்வாகிகள் குளறுபடி செய்து விட்டனர். தொண்டர்கள், பொது மக்களை அழைத்துச் செல்லாமல் குறிப்பிட்ட சில வாகனங்களில் நிர்வாகிகள் மட்டுமே சென்று வந்தனர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கட்சி நிகழ்வில் வெளிப்படுத்த கூடாது. கிளை, வட்டார, ஒன்றிய, நகர நிர்வாகிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும். இதே நிலை நீடித்தால் வரும் தேர்தலில் பூத் லெவில் கூட பணிபுரிய நிர்வாகிகள் யாரும் முன்வர மாட்டார்கள். அதுபோல், மாவட்ட நிர்வாகிகள் சிண்டிகேட் அமைத்து பணிபுரியாமல், ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி