உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் கடைகளில் பா.ஜ., நுாதன போராட்டம்

டாஸ்மாக் கடைகளில் பா.ஜ., நுாதன போராட்டம்

புதுச்சத்திரம்: கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் டாஸ்மாக் கடைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டும் நுாதன போராட்டம் நடந்தது.அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படம் இல்லாததை கண்டித்தும், டாஸ்மாக்கை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படம் ஒட்டும் போராட்டம் நடந்து வருகிறது. கடலுார் மேற்கு மாவட்ட மாவட்ட பா.ஜ., சார்பில் புதுச்சத்திரம் டாஸ்மாக் கடைகளில் பா.ஜ., மாவட்ட மகளிர் அணி செயலாளர் அர்ச்சனா ஈஸ்வர் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டும் போராட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் சுரேஷ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலர் அன்பரசன், முன்னாள் ஒன்றிய செயலர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணை தலைவர் வெங்கடேசன், கிளைத் தலைவர் மணிகண்டன், பரந்தாமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை