உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காதலியை பார்க்க வந்த வாலிபர்; கடலுார் ஆற்றில் சடலமாக மீட்பு  

காதலியை பார்க்க வந்த வாலிபர்; கடலுார் ஆற்றில் சடலமாக மீட்பு  

கடலுார்,: கடலுார் அருகே ஆற்றில் கிடந்த வாலிபர் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் நேற்று காலை 6:30 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் இறந்தவர் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் ஷாம்வேல்,19, எனத் தெரிந்தது. சென்னையில் பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்த அவருக்கு, இன்ஸ்டாகிராமம் மூலமாக கடலுாரைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். நேற்று முன்தினம் ஷாம்வேல் கடலுார் வந்தார். கடலுாரில் தனது நண்பருடன், காதலியை பார்க்க இரவு சென்ற போது, பெண்ணின் தாய் இருவரையும் பார்த்துள்ளார். இதனால் திடுக்கிட்ட ஷாம்வேல் மற்றும் அவரது நண்பர் தப்பியோடியதும் தெரிந்தது. தப்பியோடும் போது, ஷாம்வேல் ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து ஷாம்வேல் நண்பரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை