உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பரங்கிப்பேட்டை : போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரங்கிப்பேட்டையில் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் இரவு போனில் பேசிய மர்ம நபர், போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறி, இணைப்பை துண்டித்தார்.அதிர்ச்சியடைந்த போலீசார், மர்ம நபர் பேசிய போன் எண்ணை ஆய்வு செய்ததில், பரங்கிப்பேட்டை ஸ்டாலின் நகர், ஏழுமலை, 42; என்பதும், செருப்பு தைக்கும் தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவரை, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் மனநலம் பாதித்தவர் என்பதும், குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.பின்னர் அவரை போலீசார் எச்சரித்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ