உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் புத்தக கண்காட்சி வரும் 28ம் தேதி நிறைவு

சிதம்பரத்தில் புத்தக கண்காட்சி வரும் 28ம் தேதி நிறைவு

கடலுார் : சிதம்பரத்தில் அபிநயா புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. சிதம்பரம், கீழரத வீதி கோதண்டராமன் திருமண மண்டபத்தில் அபிநயா புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. இதில் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆன்மிகம், பொது அறிவு, குழந்தைகளுக்கான அனைத்து வகையான புத்தகங்கள், திருக்குறள், சிறுகதைகள், பாரதிதாசன் கவிதைகள், சங்க இலக்கிய நுால்கள், மொழிபெயர்ப்பு புத்தகங்கள் என, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புத்தக கண்காட்சி உரிமையாளர் விஜயரங்கன் கூறுகையில், 'புத்தக கண்காட்சியை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசம். அரசு விடுமுறை நாட்கள் மற்றும் அனைத்து ஞாயிறு கிழமைகளிலும் விற்பனை உண்டு. அனைத்து வகையான புத்தகங்களும் 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. புத்தக கண்காட்சி வருகிற 28ம் தேதியுடன் நிறைவடைகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !