உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுற்றித்திரியும் கால்நடைகள் பேரூராட்சி எச்சரிக்கை

சுற்றித்திரியும் கால்நடைகள் பேரூராட்சி எச்சரிக்கை

மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை பேரூராட்சி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து செயல் அலுவலர் மயில்வாகனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மங்கலம்பேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டு சாலைகளில் மாடு மற்றும் பன்றி உள்ளிட்ட கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கால்நடை மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.கால்நடை மற்றும் பன்றி வளர்ப்போர் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் கால்நடைகளை விடாமல் இருக்க வேண்டும், பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும். மீறினால், கால்நடை மற்றும் பன்றிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் மீ நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி