உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மீது அரசு பஸ் மோதி சிறுவன் பலி

பைக் மீது அரசு பஸ் மோதி சிறுவன் பலி

குள்ளஞ்சாவடி : பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், சிறுவன் உயிரிழந்தார். நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த அணுக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் ரஞ்சித், 20.இவர், அதே பகுதியை சேர்ந்த செல்வகணபதி மகன் ரித்தீஷ்,13; பாலகிருஷ்ணன் மகள் திவ்யா,7; மணிபாலன் மகன் ஹேமேஷ், 10; மகள் லோகேஸ்வரி, 12; ஆகியோரை, பள்ளியில் இருந்து நேற்று மாலை 4:30 மணியளவில் பல்சர் பைக்கில் அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.கடலுார் - விருத்தாசலம் மெயின் ரோட்டில், சின்னகாட்டுசாகை அருகே சென்றபோது, பின்னால் திருச்சியில் இருந்து கடலுார் நோக்கிச் சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் அமர்ந்து வந்த சிறுவன் ரித்தீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.காயமடைந்த மற்ற 4 பேரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சிறுவன் ரித்தீஷ், குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ