உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் தற்கொலை காதலன் கைது

பெண் தற்கொலை காதலன் கைது

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பெண் தற்கொலை வழக்கில், காதலனை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த மருங்கூர் நெல்லடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன், 45; இவரது மகள் அமுதா, 21; நெய்வேலி சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். அப்போது, வடலுார் வீணாங்கேணிகுப்பம் பகுதியை சேர்ந்த அஞ்சாபுலி மகன் அன்பு, 28; என்பவருடன் அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு அன்புவிடம் மொபைல் போனில் அமுதா பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அமுதா துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.தற்கொலைக்கு துாண்டியதாக காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து அன்புவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை