உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பிராமணர் சங்கம் நீர்மோர் வழங்கல்

 பிராமணர் சங்கம் நீர்மோர் வழங்கல்

கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் கூத்தப் பாக்கம் கிளை சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூத்தப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிளைத் தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். துணைத் தலைவர் சம்பத் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி செயலாளர் லட்சுமணன் வரவேற்றார். பொருளாளர் கணேசன், செயலாளர் பிரணதார்த்திஹரன், பாலகுரு, ராஜசேகரன், ராமகிருஷ்ணன், சங்கரன், ரமேஷ், ராஜேஸ்வரி சங்கரன் உட்ட பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் பக்தவத்சலம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !