உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கிளை நுாலகம் இடமாற்றம்: வாசகர்கள் எதிர்பார்ப்பு

 கிளை நுாலகம் இடமாற்றம்: வாசகர்கள் எதிர்பார்ப்பு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் உள்ள கிளை நுாலகத்தில் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நுாலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மந்தாரக்குப்பம் என்.எல்.சி., குடியிருப்பு பகுதியில் அரசு கிளை நுாலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், என்.எல்.சி., இரண்டாம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக இங்கிருந்த கிளை நுாலகம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி மைதானம் அருகில் உள்ள பழைய போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நுாலகத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்கள் நவீன வசதிகளுடன் கூடிய கிளை நுாலகம் இல்லாததால் அவதியடைகின்றனர். எனவே, நுாலகத்தை கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !