வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, தளவாட பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெண்ணாடம், வேலன் நகரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன், 52. இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் அவருக்கு சொந்தமான கம்பி கட்டிங் மெஷின், கிரைண்டிங் மெஷின், டிரில்லிங் மெஷின் மற்றும் மர பலகை உள்ளிட்ட பொருட்களை பூட்டி வைத்து விட்டு, 10ம்தேதி வெளியூர் சென்றார்.நேற்று முன்தினம் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த தளவாட பொருட்கள் திருடுபோயிருப்பது தெரிந்தது. கொளஞ்சிநாதன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.