மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா
10-Aug-2025
சிதம்பரம்:சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் தாய்ப்பால் வார நிறைவு விழா நடந்தது. ரோட்டரி சங்கம், மாவட்ட இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுமம், இன்னர்வீல் சங்கம் ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தன. வீனஸ் கல்விக் குழும நிறுவனர் குமார் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் கனகவேல், இன்னர்வீல் சங்கத் தலைவி கோமதி கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் நரேந் திரன் வரவேற்றார். சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் நல மருத்துவத் துறை தலைவர் ரமேஷ், இந்திய குழந்தைகள் நல திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிவப்பிரகாசம் ஆகியோர் தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினர். தாய்ப்பால் வார விழா போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்துகளின் அவசியம் குறித்த நுாலை பள்ளித் தாளாளர் ரூபியாள்ராணி வெளியிட்டார். நிகழ்ச்சியை ஆசிரியை சுபஸ்ரீ தொகுத்து வழங்கினார்.
10-Aug-2025