உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய்ப்பால் வார விழா

தாய்ப்பால் வார விழா

கடலுார்; கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா, கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில் நடந்தது. சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஷபீனா பானு வரவேற்றார். முன்னாள் தலைவர்கள் ராஜசேகர், ரமேஷ் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட ஆளுநர் பிறையோன், முன்னாள் உதவி ஆளுநர் சுதன் பவர் டெக் பூங்குன்றன், உதவி ஆளுநர் ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சேவை திட்ட இயக்குனர் டாக்டர் முகுந்தன், டாக்டர்கள் சுமதிஸ்ரீ, விவேகானந்தன் வாழ்த்திப் பேசினர். சங்க செயலாளர் வரதராஜன், பொருளாளர் ஆனந்த்ராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை