உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலம் கட்டும் பணி மந்தம்

பாலம் கட்டும் பணி மந்தம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மந்தமாக நடைபெறும் வி.கே.டி., பைபாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு அருகே பெரியகுப்பத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி இதுநாள் வரை முடியாமல் மந்தமாக நடந்து வருகிறது.பின்னலுார், குறுக்கு ரோடு ஆவின்பால்பண்ணை அருகே உள்ள உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணிகள் முடிந்து போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில் பெரியகுப்பம் உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணிகள் மந்தமாக நடந்து வருவதால் சென்னை, கும்பகோணம் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சேத்தியாத்தோப்பிற்குள் புகுந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை