உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாடிக்கையாளர் சேவை மாதம் பி.எஸ்.என்.எல்., அறிவிப்பு

வாடிக்கையாளர் சேவை மாதம் பி.எஸ்.என்.எல்., அறிவிப்பு

கடலுார்; வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சேவை மாதத்தை துவங்கியுள்ளது.இதுகுறித்து கடலுார் மாவட்ட பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் பாலச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த பி.எஸ்.என்.எல்., ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாடிக்கையாளர் சேவை மாதத்தை துவங்கியுள்ளது. இது சேவை தொடர்பாக சிக்கல்களை தீர்ப்பது, நெட்வொர்க் தரத்தை மேம்படுத்துவது மற்றும் வாடிக்கையாளர் விருப்பத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சி பி.எஸ்.என்.எல்.,இன் வாடிக்கையாளர் திருப்திக்கான உறுதிப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. சேவை நம்பகத்தன்மை, விரைவான எப்.டி.ஹெச்., வழங்கல் மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு வட்டம் அனைத்து வாடிக்கையாளர்களையும் இந்த https://cfp.bsnl.co.in/என்ற வலைத்தளம் மூலம் கருத்துகள், பரிந்துரைகள், சிக்கல்கள் அல்லது சேவை கோரிக்கைகளை வழங்குவதன் மூலம் சேவை தரத்தை உயர்த்த உதவிடமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை