உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பக்கீங்காம் கால்வாய் பாலம் உடையும் அபாயம்

பக்கீங்காம் கால்வாய் பாலம் உடையும் அபாயம்

பரங்கிப்பேட்டை அருகே பக்கீங்காம் கால்வாய் பாலம் உடைந்து, கீழே விழுந்துவிடும் அபாய நிலை உள்ளதால், 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கே.பஞ்சங்குப்பம் மெயின்ரோட்டில் இருந்து புதுக்குப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலையில்,பக்கீங்காம் கால்வாய் ப்பாலம் உள்ளது. இப்பாலத்தை, கே.பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னுார், வேளங்கிராயன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதால், பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து, ஆங்காங்கே கான்கீரிட் கம்பிகள் வெளியில் தெரிகிறது. மேலும், பாலத்தை தாங்கி நிக்கும் துாண்கள் உடைந்துபோய் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் அபாய நிலையில் உள்ளது.இதனால்,5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, பழுந்தடைந்துள்ள பக்கீங்காம் கால்வாய் பாலத்தை இடித்துவிட்டு, புதியதாக பாலம் கட்டிதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
டிச 18, 2024 17:37

இதை இப்பிடியே உட்டா இன்னும் ஒரு வருசமாவது தாங்கும். திருட்டு திராவிடனுங்க இடிச்சுட்டு புதுசாக் கட்டுனா மூணு மாசம் தான் தாங்கும். எப்புடி வசதி?


அப்பாவி
டிச 18, 2024 17:35

அதுல இன்னும் உடையறதுக்கு என்னடா இருக்கு? பச்கம் கட்டின நாளிலிருந்து பத்து பைசாவுக்காவது ரிப்பேர் பண்ணுனீங்களாடா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை