உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

 மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

விருத்தாசலம்: மணல் கடத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றபோது, வி.குமாரமங்கலம் மணிமுக்தாறு அணைக்கட்டு பகுதியில் ஆற்று மணல் ஏற்றி வந்த மூன்று மாட்டு வண்டிகளை மடக்கிப் பிடித்தனர். அப்போது, மாட்டு வண்டிகளை ஓட்டிவந்த மூவர் தப்பியோடினர். விசாரணையில், அவர்கள், சாத்தமங்கலம் முருகவேல் மகன் வேல்மணி, அரசகுழி தனபால் மகன் ராஜா, முத்துக்கண்ணு மகன் அன்பழகன் என்பது தெரிந்தது. அவர்கள் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, மூன்று மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி