உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஜினியர் வீட்டில் திருட்டு

இன்ஜினியர் வீட்டில் திருட்டு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே இன்ஜினியர் வீட்டில் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த செடுத்தான்குப்பம் தெர்மல் பவர் சிட்டி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 40; இன்ஜினியர். இவர் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் பெட்ேராலியம் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.குடும்பத்துடன் குஜராத்தில் தங்கி இருக்கிறார். செடுத்தான்குப்பத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த 23ம் தேதி இரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து பீரோவில் 13 கிராம் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி நகைகளை திருடிச் சென்றனர். புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி