உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைவில் பஸ் வசதி

ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைவில் பஸ் வசதி

திருச்சி - சென்னை ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என தினசரி ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. பயணிகள் நலன் கருதி அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 9.5 கோடி ரூபாயில் சமீபத்தில் புனரமைக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷனை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இருப்பினும், உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் வசதி இல்லாமல், பயணிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் கடந்த 24ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா பஸ் வசதி செய்து தருவது குறித்த கருத்துருக்களை தரும்படி, போக்குவரத்துக் கழக மண்டல அதிகாரிக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்கள் எண்ணிக்கை, பயணிகள் வருகை, முக்கிய ரயில்கள் இயக்கம் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ்கள் இயக்கப்படும் என்பதால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை