உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் டைமிங் பிரச்னை கண்டக்டர்கள் வாக்குவாதம்

பஸ் டைமிங் பிரச்னை கண்டக்டர்கள் வாக்குவாதம்

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் 'டைமிங்' பிரச்னை காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண் டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலத்தில் இருந்து பெண்ணாடம், பெரம்பலுார் வழியாக துறையூருக்கு டி.என். 46 - எ.எப். 4200 பதிவெண் கொண்ட தனியார் பஸ் நேற்று காலை புறப்பட்டது. 5 நிமிடம் தாமதமாக கடலுாரில் இருந்து விருத்தாசலம் வந்த டி.என். 32 - என். 5189 பதிவெண் கொண்ட பஸ்சும் மதுரைக்கு புறப்பட்டது. வரும் வழியில் இரு பஸ் டிரைவர்களும் 'டைமிங்' பிரச்னை காரணமாக பஸ்களை சாலையின் குறுக்கே சென்று மாறி, மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். பெண்ணாடம் பஸ் ஸ்டாண்ட் அருகில் வந்த போதும், இரு பஸ்களும் சாலையின் குறுக்கே மீண்டும் மாறி மாறி சென்றன. போலீஸ் ஸ்டேஷன் அருகில் வந்த போது, தனியார் பஸ் முன்பு, அரசு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இரு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பெண்ணாடம் போலீசார் இரு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் 10 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை