உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வணிக வளர்ச்சி குழும கூட்டம்

வணிக வளர்ச்சி குழும கூட்டம்

சிதம்பரம்,: சிதம்பரம் வணிக வளர்ச்சி குழும 15வது மாதாந்திர கூட்டம் நடந்தது. சிதம்பரம் சாரதாராமில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் சிவராமவீரப்பன் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன், அகோரமூர்த்தி முன்னிலை வகித்தனர். முரளி வரவேற்றார். சென்னை பாலாஜி சேஷாத்ரி பங்கேற்று வணிக வளர்ச்சி குறித்து பேசினார். சேவை பணியாற்றும், கீரீடு தொண்டு நிறுவன தலைவர் நடனசபாபதிக்கு, உழைப்பால் உயர்ந்த உத்தமர் விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் ரமேஷ் ஆனந்த், சுந்தர், பிரதீஷ் ராஜா உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ