மேலும் செய்திகள்
சட்ட தன்னார்வ தொண்டர் பணிக்கு ஆட்கள் நியமனம்
17-Oct-2025
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சட்ட தன்னார்வலர்கள் பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்ட பணிகள் குழுக்கள் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய அலுவலகங்களில் சட்ட தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டாக்டர்கள், மாணவர்கள் மற்றும் சட்டக் கல்லுாரி மாணவர்கள் (வழக்கறிஞராக பதிவு செய்யும் வரை), அரசியல் அமைப்பு சாராத, பொதுச் சேவை புரியும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்காக பணிபுரியும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள், நீண்ட கால தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும், நன்னடத்தை கொண்ட கல்வி பயின்ற சிறைவாசிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் அறிய https://cuddalore.dcourts.gov.inஎன்ற இணையதளத்தில் 'Notification' பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும் 5ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், கடலுார் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
17-Oct-2025