உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அரசின் 'தமிழ்ச்செம்மல்' விருதுக்கு தமிழ் தொண்டாற்றும் தகுதி உள்ள தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ் தொண்டாற்றும் தமிழ் ஆர்வலர்களை பாராட்டும் வகையில் 'தமிழ்ச்செம்மல்' விருது வழங்கப்படுகிறது. விருது, ரூ.25,000பரிசுத் தொகையுடன் பரிசு பத்திரம் வழங்கப்படுகிறது. தமிழ்ச்செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் வழங்கப்படும். 2025ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது வழங்க தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.comஎன்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். கடலுார் மாவட்டத்தில் தகுதியான தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பத்துடன் தன் விவரக் குறிப்பு, 2 போட்டோ, தமிழ் பணி குறித்த ஆவணங்கள் ஆகியவை இணைத்து, கடலுார் மாவட்ட தமிழ்த்துறை உதவி இயக்குனர் லுவலகத்தில் வரும் செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை