மேலும் செய்திகள்
வேளாண் வளர்ச்சி பிரசார இயக்க முகாம்
02-Jun-2025
விருத்தாசலம்; குமராட்சி அடுத்த கீழக்கரை, பூலாமேடு, வரதராஜன்பேட்டை, கீழவன்னியூர், தேமூர், வடமூர் தாளகான்பட்டு ஆகிய கிராமங்களில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க முகாம் நடந்தது.முகாமிற்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினார்.இதில், பேராசிரியர்கள் கண்ணன், சுகுமாறன், இணை பேராசிரியர் ஜெயக்குமார், மற்றும் சென்னை மத்திய மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.இந்த முகாமில், மத்திய மாநில அரசு திட்டங்கள், விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் குறித்து வட்டார வாரியாக எடுத்துரைக்கப்பட்டது.மேலும், ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல், பயிர் கடன் அளிப்பது வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு ரூ.3 லட்சம் கடன் வழங்குவது. கால்நடை வளர்ச்சி மற்றும் மீன் வளர்ப்புக்கு ரூ.2 லட்சம் கடன் வழங்குவது. வேளாண் பாதுகாப்பு, மானாவரி எண்ணெய்வித்துக்கள், மன்வகை, இயற்கை விவசாயம், மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், அதிக மகசூல் தரும் நெல் உள்ளிட்ட ரகங்கள், விதை நேர்த்தி, இயற்கை உரம் மற்றும் பசுந்தாள் உரங்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
02-Jun-2025