உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாய்க்காலை துார்வார கோரிக்கை

 வாய்க்காலை துார்வார கோரிக்கை

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் பகுதி வாய்க்காலை அகலப்படுத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலைப்பகுதியிலிருந்து வரும் மழைநீர், அப்பகுதி மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாய்க்கால் வழியாக வந்து கெடிலம் ஆற்றில் கலந்து விடுகிறது. இந்த வாய்க்காலில் மழைநீர் ஓட வழியில்லாமல் புதர்போல் மாறி ஒரு மீட்டர் அகலத்திற்கு மட்டுமே வழி உள்ளது. இதனால் கடந்த மாதம் பெய்த கனமழையில், மழைநீர் செல்ல வழியில்லாமல் சி.என்.பாளையம் பஸ் நிறுத்தம், காமாட்சிபேட்டை, மாரியம்மன் கோவில் தெரு, கடைவீதி உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்தது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால், மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து, கெடிலம் ஆறு வரை வாய்க்காலை துார்வாரி அகலப்படுத்திட கோரிக்கை எழுந் துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி