மேலும் செய்திகள்
இலவச கண் பரிசோதனை முகாம்
20-Oct-2025
பண்ருட்டி: பண்ருட்டி இன்னர் வீல் சங்கம், கடலூர் கிருஷ்ணா கேன்சர் மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்கம் இணைந்து மகளிர் மார்பக புற்று நோய் மற்றும் கருப்பை புற்று நோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாமை நடத்தியது. இன்னர்வீல் சங்க தலைவி உமாமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தியா ஸ்ரீகாந்த், பொருளாளர் லலிதா , தனலட்சுமி ,காயத்ரி, உமாமகேஸ்வரி, சூரியபிரபா முன்னிலை வகித்தனர். கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணன், டாக்டர்கள் தெரசிட்டா, ராம்சுந்தர், ஹேமாவதி குழுவினர்கள் பரிசோதனை செய்தனர். பண்ருட்டி பகுதியை சேர்ந்த 80 பெண்கள் பரிசோதனை செய்துகொண்டனர். இதில் டாக்டர் மருத்துவர் ஸ்ரீதர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலூர் மண்டலத் தலைவர் சண்முகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 4நபருக்கு அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு அறிவுரை வழங்கினர்.
20-Oct-2025