மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி பந்தல் கால் நடுதல்
22-Aug-2025
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் 32ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் இரவு சுவாமிக்கு சிறப்பு சந்தன அலங்காரமும் 1,008 அர்ச்சனை, பஜனை பாடல்கள் பாடி சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து உலக நன் மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் துணி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை 31ம் தேதி மாலை 6;00 மணியளவில் சுவாமிக்கு 1,008 கொழுக்கட்டையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து வடக்குவெள்ளுர் காசி விஸ்வநாதர் கோவில் திருக்குளத்தில் விநாயகர் சிலை விஜர்சனம் செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து முன்னணியினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்
22-Aug-2025