கஞ்சா பதுக்கல் : வாலிபர் கைது
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது, புதுக்குப்பம் மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர், அதே பகுதியை சேர்ந்த குருநாதன் மகன் விக்னேஷ், 30, என்பதும், கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விக்னேைஷ கைது செய்தனர். அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.