கஞ்சா விற்பனை : 2 பேர் கைது
காட்டுமன்னார்கோவில்: பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த2 பேரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகலின் பேரில், இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட பள்ளி அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உடையார்குடி விவேகானந்தன் மகன் ஹரிபிரசாத், 19; சந்திரசேகர் மகன் பரணி தரன், 21; என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரிந்தது. உடன், 2 பேரையும் போலீசார் கைது செய்து, 200 கிராம் கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனர்.