உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

சிதம்பரம்; சிதம்பரம் அடுத்துள்ள குமராட்சியில் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்துள்ள குமராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து குமராட்சி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது குமராட்சி கீழக்கரை கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அன்வர் மகன் சேட்டு, 25; என்பவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து, குமராட்சி போலிசார் வழக்கு பதிந்து சேட்டை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ